ராஜஸ்தானில் பொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த ஜோடியை பிடித்து ஊர்மக்கள் கொடூரமான தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நிம்பி ஜோதா என்ற பகுதியில் இளம்காதல்ஜோடி பொது வெளியில் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த ஒருவர் அருகில் இருந்த மக்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன்று திரண்ட ஊர் மக்கள் ஊர் பஞ்சாயத்தில் தெரிவித்துள்ளனர். அவர்களை கையும் களவுமாக பிடித்து பெண்ணின் தலைமுடியை கத்தியால் வெட்டியும், குறித்த வாலிபரை இரக்கமின்றி ஊர்மக்களின் சிறுநீரை குடிக்க வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததோடு வீடியோவை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றிய நபர்களையும் ,பொதுமக்கள் பலரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






