சுமந்திரனின் கதையைக் கேட்ட ரணிலிற்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் ரணிலின் கடைசி நேர முயற்சி கட்சிக்குள் கூட கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கடைசி வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா என பார்த்திருந்து, சஜித் அலை பெருகி வருவது முழு இலங்கையும் அறிந்த விடயம்.

அதை தடுப்பதற்காக நிறைவேற்றதிகார ஒழிப்பை கையிலெடுத்தது காய் நகர்த்தினால் ஏனைய கட்சிகளும் ஆதரிக்கும் அப்படியான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அடிபணிய வைத்துவிடலாம் என சுமந்திரன் ரணிலிற்கு ஆலோசனை வழங்க ரணிலும் அப்படியே செயற்படுத்த முற்பட்டு கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அரசியலில் அனைவராலும் நல்லவரா பார்க்கப் பட்டு வந்த ரணில், முதன்முறையாக மோசமான நடவடிக்கையொன்றின் ஊடாக கறைக்குள்ளாகியுள்ளார்.

தற்போது ரணில் மேற்கொண்ட நிறைவேற்றதிகார ஒழிப்பு முயற்சியில் பிரதான பாத்திரம் வகித்தவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பிரதமர் ரணிலின் ஆலோசகருமான எம்.ஏ.சுமந்திரன் என்பது வெளிச்சமாகியுள்ளது.

கடந்த நான்கரை வருடத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரது அரசிற்கும் ஏற்பட்ட ஆபத்துக்களில் எல்லாம் தமிழ் தேசியக் கூட்மைப்பை அடகு வைத்து பல்வேறு ஒத்தாசைகளையும், தனது சட்டரீதியான வெற்றிகரமான ஆலோசனை வழங்குபவராகவும் இருந்த சுமந்திரன், இம்முறை சறுக்கியுள்ளார் அவருக்குத் தெரியாது யானைக்கும் அடி சறுக்கும் என…..

பதவி மற்றும் சொத்துக்களில் பற்றற்றவர் போல பகிரங்கமாக காண்பித்து வரும் ரணிலின் மனதிலுள்ள பதவியாசையை நேற்றைய தினம் அம்பலமாகியுள்ளது.

தற்போதைய நிறைவேற்றதிகார ஒழிப்பு விவகாரங்களில் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் முடிவுகளால், ஐ.தே.க பாதிக்கப்படுகிறது.

ரணில் சுமந்திரனின் தவறான வழிநடத்துதல்களில் முடிவுகளை எடுக்கிறார் என ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள் பகிரங்கமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் ஐ.தே.கவின் இளம் எம்.பிக்கள் சுமார் 10 பேர் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் காரசாரமான கருத்துக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சுமந்திரனின் ஆலோசனையிலேயே ரணில் தேவையற்ற வேலைகளை பார்க்கிறார் என அவர்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்று விசேட அமைச்சரவை கூட்டம் நடந்ததன் பின்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு நடந்தது.

அபிவிருத்தி நிதிகள் விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் காரசாரமான விமர்சனங்களை மங்கள வைத்துள்ளார்.

பிரதமர் பதவி வெறி கொண்டு செயற்படுவதாகவும், நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் என நான்கரை வருடமாக நாம் சொல்லி வந்தோம்.

அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இப்படி செய்வது வெட்கக்கெடாது.

சுமந்திரன்தான் ரணிலை தலைகுப்புற விழுத்தியுள்ளார் என காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபாலவும் இணக்கம் தெரிவித்ததாக முன்னர் சொல்லப்பட்டது.

எனினும், இன்று அமைச்சரவை கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய மைத்திரி இதில் நான் தொடர்புபட்டிருக்கவில்லை.

பிரேரணை தொடர்பான விவாதத்தை ரணில் விரும்பியதால், அமைச்சரவையை கூட்டினேன் என்றார்.

ஒட்டு மொத்தத்தில் தமிழ் மக்களிற்கே எதையும் செய்ய கையாலாகாத சுமந்திரன் ரணிலை வழிநடத்துவது மிக கேவலமானது என யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதமர் ரணில் அல்ல சுமந்திரன் என்பதற்கான ஆதாரம்..

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More