வீடொன்றுக்குள் குவிந்திருந்த பெண்கள்! சுற்றிவளைத்த தேரர்களால் விரட்டியடிப்பு

பண்டாரகமவில் சந்தேகத்திற்குரிய முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்ட நபர்களை மஹா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

மெதகம பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த பிரார்த்தனை நடவடிக்கைகளை முன்னெடுத்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர்.

சர்ச்சைக்குரிய குறித்த வீட்டில் அதிகளவான பெண்கள் இருந்துள்ளனர். ஆண்கள் சிலருடன் இணைந்து கதவுகளை மூடிக்கொண்டு, தெரியாத மொழி ஒன்றில் இரத்தம் குறித்து கூறி கூச்சலிட்டுள்னர். இதனால் மஹா சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து பின் பக்கமாக சென்று வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் எனவும், அவர்களை வேறு மதத்திற்கு மாற்றுவதற்கான திட்டமாக இது இருக்கலாம் எனவும் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு உள்ள நோய் மற்றும் மந்திர கட்டுகளில் இருந்து விடுவிப்பதாக கூறி இந்த பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வல்கம சந்தரரத்ன தேரர்,

பல்வேறு குழுக்கள் எங்கள் சமூகத்தில் உருவாகியுள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என பார்க்கும் போது தெரிந்தது. சஹ்ரானின் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளன. எனினும் ஆங்காங்கே எஞ்சியிருப்பவர்கள் பல்வேறு மதப்பிரச்சாரங்களை முன்னெடுத்து சிங்களவர்களுக்கு பணம் வழங்கி அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கப்படும் என்பதே எங்கள் பயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.