திருமணத்தின் போது மணமேடையில் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை! என்ன செய்தார் தெரியுமா? வெளியான வீடியோ

இந்தியாவில் மணப்பெண்ணைஅலாக்காக தூக்க நினைத்து மாப்பிள்ளை கீழே விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்கத்தில் சமீபத்தில் இளம் ஜோடிக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பொதுவாக அப்பகுதிகளில் திருமணம் முடிந்த மணப்பெண்ணை, மணமகன் பின்னால் சென்று தூக்க வேண்டும் என்பது ஐதீகம், அதன் படி திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது மாப்பிள்ளை மணப்பெண்ணின் பின்னால் சென்று அவரை தூக்க முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. திருமணம் மண்டபம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

இதனால் அவமானம் அடைந்த மாப்பிள்ளை, மணப்பெண்ணை முடிந்த மட்டும் தம்கெட்டி தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்படியே இருவரும் பின்னால் சாய்ந்தபடி தலைகுப்புற விழுந்தனர்.

நல்லபடியாக இருவருக்கும் எந்த அடியும் படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

புதுமண தம்பதிகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் இந்த திருமணத்தை எங்களது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்று புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like