முல்லைத்தீவில், இன்றையதினம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சமயத்தில், அந்த இடத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தமிழரிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது யாருமற்ற அனாதைகள் போல் காவல்துறையினர் தமிழ் மக்களை நடத்திய விதம் மக்களை பாரிய கவலைக்கு ஆளாக்கியுள்ளது.