திலீபனிற்கு வழங்கப்பட்ட லெப்.கேணலை தூக்குங்கள்! ஆர்னோல்ட் உத்தரவால் குழப்ப நிலை

தமிழினத்திற்காய் தன்னை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லுாா் ஆலய சுற்றாடலில் உள்ள திலீபனின் நினைவு துாபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு 5 அம்ச கோாிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் சாகும் வரையான உண்ணா நோன்பிருந்து தன் இனத்திற்காய் பார்த்தீபன் தன்னுயிர் ஈந்தான்.

இந்நிலையில் திலீபனின் 32 வது நினைவு தினம் இன்று நல்லூரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இதேவேளை சில இளைஞர்கள் திலீபனின் 32 அடி உருவப்படத்தை அமைத்திருந்ததோடு நேற்றிரவு அதனை அவர்கள் அங்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அங்கு சென்ற யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், திலீபனிற்கு புலிகளால் வழங்கப்பட்டிருந்த லெப்.கேணல் தர நிலையை அகற்றும்படி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று காலையில் அந்த இடத்திற்கு வந்த யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், திலீபனிற்கு புலிகளால் வழங்கப்பட்டிருந்த லெப்.கேணல் தர நிலையை அகற்றும்படி வலியுறுத்தினார்.

அதனால் தமக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்படுமென, இளைஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, லெப்.கேணல் என குறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் கறுப்பு துணியினால் மறைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.