1200 மாணவர்கள் முன்னிலையில் தமிழ் மொழிக்காக கம்பீரமான குரல் எழுப்பிய சிங்களப் பெண்.!

சிங்கள மாணவி ஒருவர் இரு நாட்கள் பதுளையிலுள்ள தமிழ்பாடசாலைக்கு சென்றுள்ளார். 1200 மாணவர்கள் முன்னிலையில் தமிழ் மொழிக்காக கம்பீரமான குரலில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.

இது தொடர்பாக சிங்கள பெண் தெரிவித்தது,

நான் ஒரு சிங்கள பெண்ணாக இருந்தாலும் தமிழ்பாடசாலையில் பயில்கின்றேன். நான் தமிழ்ப்பாடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கின்றேன். தமிழ் மொழியை ஆழமாக விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இருப்பினும் நானே தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சி பெறும் போது தமிழ் சூழலில் வாழும் மாணவர்கள் ஏன் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவதில் சிரமப்பட வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பிருந்தார்.

மேலும் ஏன் தமிழ் மொழியில் பேசத் தயங்க வேண்டும்? ஏன் தமிழ் மொழியில் பேசினால் கேலி செய்வார்கள் என நாம் என் நினைக்க வேண்டும் என சிங்கள கம்பீரமாக தமிழ் மாணவர்கள் முன் குரல் எழுப்பியுள்ளார்.