கொழுப்பில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலையின் தாதி ஒருவரின் செயல்பாடு தொடர்பில் அங்கு செல்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலைக்கு சிகிற்சை பெறுவதற்காக குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தே சிகிற்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள தாதி ஒருவர் வரிசையில் இருப்பவர்களை தவிர்த்து பிந்தி வருபவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு வைத்தியரிடம் செல்ல அனுமதிப்பதாக அங்கு செல்லும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாங்கள் நேரத்துடன் சென்று நீண்ட நேரம் குழதைகளை சுமந்தபடி காத்திருந்தபோதும் தம்மை உள்ளே அனுமதிக்காமல் பிந்தி வருபவர்களிம் பணம் வாங்கி அவர்களை குறித்த தாதி சிகிற்சை பெற அனுமதிப்பதாகவும் கூறியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் உரியவர்கள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






