வவுனியாவில் பேரூந்தில் பயணித்த பெண்ணிடம் பணத்தை திருடிய பெண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் வவுனியாவில் இன்றுமாலை இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேரூந்தில் இருந்து தாயும், மகனும் இறங்க முற்பட்ட வேளை, அதே பேரூந்தில் பயணித்த பெண் ஒருவர் இறங்க முற்பட்ட பெண்ணின் கைப்பையில் இருந்து பணத்தை திருடிசென்றுள்ளார்.
பணத்தை திருடுவதை உணர்ந்த பெண்ணும் அவரது மகனும், அப் பெண்ணை துரத்திச் சென்ற போது அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளார்.
எனினும் குறித்த பெண் மடக்கிபிடிக்கபட்ட நிலையில், தவறை ஒப்புகொண்ட அவர் திருடிய பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினார்.
எனினும் அப்பகுதியில் ஒன்று கூடியவர்களால் குறித்த பெண் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






