விடமாட்டேன் கட்சியின் யாப்பின் படி நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அடம்பிடித்த ரணில் சஜித்துக்கு ஏன் விட்டுக் கொடுத்தார் என்ற ஒரு ரகசியம் கசிந்துள்ளது தனது அரசியல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எம்.எம்.நிலாடீன் அவர்கள்.
தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…
அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் ஆகியோர்கள் கடந்த வாரங்களாக பிரதமர் ரணிலிடம் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளார்கள்.
அதாவது ஒட்டுமொத்தமாக இரண்டு நாடுகளும் ரணிலை கைவிட்ட நிலை. மிரட்டல் போன்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியாக அமெரிக்கா ரணிலிடம் போட்ட வெடிகுண்டு இலங்கை மத்திய வங்கி கொள்ளைக்காரர் அர்ஜூன் மகேந்திரனை இன்டர் போல் பொலிஸ் மூலமாக விரைவில் அவரை கொழும்பு கொண்டு வர அமெரிக்கா தனது சக்தியை பயன் படுத்தும் .
நீங்கள் ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்து 24 மணி நேரத்துக்குள் அர்ஜூன் மகேந்திரன் கொழும்பில் இருப்பார். அவர் சாட்சியாக மாற்றப்படுவார்.
அதாவது ஒரு ப்ளக் மெயில் போன்று. அண்ணச்சி மிரண்டு போய் விட்டார். அதன் பின்னர்தான் ரணில் நிபந்தனை அது இது என்று இறங்கி வந்துள்ளார் .
இதுவொரு நீண்ட கதை
சஜித்துக்கான குழிபறிப்பு குத்து வெட்டு பற்றியும் அவரது வெற்றி சாத்தியமா என்பது குறித்தும் பின்னர் பார்ப்போம் .
இன்று மாலை இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசியல் என்பது பிராந்திய அரசியல் சார்ந்தது . விசேடமாக இந்திய நலன் அமெரிக்க நலன் கொண்டது
கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் பின்னர் மகிந்தர் ராணுவ ஆட்சியோன்றுகு திட்டமிட்ட போது அலறி மாளிகையை விட்டு மகிந்தரை வெளியேற்ற அமெரிக்கா தனது ராஜதந்திரத்துக்கு அப்பால் அமெரிக்க சக்தி கொண்டு வெளியேற்றியது என்பது வேறு கதை .
இந்த தேர்தலில் அமெரிக்கா + இந்தியா இணைந்து சீனாவுக்கு எதிராக முழு வீச்சில் நிற்கும் .






