யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரது வீட்டிற்கு குறிவைத்து இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் அளவெட்டி வீதி கந்தரோடையில் அமைந்துள்ள கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரான ரவிச்சந்திரன் ஜோகாதேவி என்பவரது வீட்டிலேயே சற்று முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.