மண்டூர் 3ம் பிரிவைச் சேர்ந்த கருணா குழுவை சேர்ந்த நடேசன் ருஷாந்தன் என்பவரால் சில தினங்களுக்கு முன்னாடி தனது (கார்) வாகனத்தால் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த விபத்துக்குள்ளாகிய நபரின் அண்ணனாகிய
(50 வயது மதிக்கத்தக்க) கிருபாகரன் என்பவர் ருஷாந்தனை அடையாளம் கண்டு பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்.

முறைப்பாடு பொய்யானது தனது மகன் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறி கிருபாகரனின் வளவுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார் ருஷாந்தன் தாயார் தீடீரென அத்துமீறி நுழைந்த (தகப்பனார்) நடேசன், ருஷாந்தன் இவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார் கிருபாகரன்.
இதே நிலையில் உடன் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய சாலை அதிகாரிகளால்
வெல்லாவெளி போலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றமையினால் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் சம்பந்தப்பட்ட இரு கருண குழு ஆதரவாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படியானவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படவேண்டும் இவர்களின் பண பலத்தால் வெளியில் வந்து இவர்களின் அதிகாரத்தை இன்னொருவர் மீது காட்டுவது நிச்சயம்.
கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் வெல்லாவெளி பிரதேச சபைக்காக கருணாவின் கட்சியில் மண்டூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழ் படத்தில் காட்டப்பட்டுள்ளவர் கொலையின் பிரதான நபர்….






