கலைந்தது கோட்டாவின் ஜனாதிபதி கனவு! இரகசிய தகவலால் மகிந்த அவதி

கோட்டாவுக்கு பதிலாக இன்னொரு அபேட்சகரை தேர்வு செய்து வைத்துக்கு கொள்ளுமாறு மகிந்த தேசப்பிரிய , மகிந்த ராஜபக்சவுக்கு இரகசிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோட்டாவின் இரட்டை குடியுரிமை பிரச்சனை காரணமாக கோட்டா தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம் என தெரிகிறது.

கோட்டாவுக்கு எதிரான குடியுரிமை பிரிச்சனை குறித்த வழக்கு எதிர்வரும் 2 , 3 , 4 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சில சமயங்களில் மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்ச அல்லது பசில் ராஜபக்ச களம் இறங்கலாம். பசில் ராஜபக்ச சந்தடியின்றி அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதில் கூட சிக்கல் ஏற்படும் நிலை வருமானால் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் ஆயத்தங்களும் செய்யப்படுவதாக போராசிரயர் ஜீ.எல்.பீடிஸ் மனித உரிமைகள் ஆர்வலர் நிமல்கா பெர்ணான்டோவிடம் நட்பு ரீதியில் கலந்துரையாடும் போது தெரிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே கோட்டா ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்பது தெரிய வரும்? எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.