கோல்டன் டிக்கெட் பெற்ற முகேனுக்கு இரண்டாம் இடம்! டைட்டில் வின்னர் இவரா!… ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்கள்

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் சாண்டியாக தான் இருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

சாண்டியை டைட்டில் வின்னராக்கத் தான் பிக் பாஸ் இப்படி காய் நகர்த்துகிறாரோ என்ற சந்தேகம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காரணம் விஜய் டிவிக்கும், சாண்டிக்கும் உள்ள நெருக்கம். பிக் பாஸ் வீட்டில் அதிகம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதவரும் சாண்டி தான்.

நிச்சயம் பைனலுக்கு சாண்டியுடன் கவினோ அல்லது தர்ஷனோ களமிறங்கும் பட்சத்தில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக் குறி தான். எனவே தான், பலமான போட்டியாளர்களான தர்ஷனையும், கவினையும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, சாண்டியுடன் முகென், ஷெரின் மற்றும் லொஸ்லியாவை ஓட விட்டுள்ளார் பிக் பாஸ்.

கோல்டன் டிக்கெட் பெற்றவர்கள் பைனலுக்கு வருவார்களே தவிர, இதுவரை தமிழில் டைட்டில் வென்றதில்லை. இம்முறையும் அது அவ்வளவாக சாத்தியமில்லை.

கவின் வாக்குகள் சாண்டி மற்றும் லொஸ்லியா என இரண்டாகப் பிரிந்து விடும். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் சாண்டி தான் இம்முறை டைட்டில் வின்னராக இருக்க கூடும் என்பது நெட்டிசென்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

இம்முறை தர்ஷன் தான் ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் வின்னராக கருதப்பட்டு வந்தவர். எப்படியும் அவர் பைனலுக்கு செல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக வெளியேற்றப்பட்டு அதிர்ச்சி தந்துள்ளார். அதேபோல் சமூகவலைதளத்தில் தனக்கென பெரும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் கவின்.

நிஜமாகவே ஐந்து லட்ச ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான் கவின் வெளியேறினார் என்பது நம்பும் படி இல்லை.

ஏனென்றால் ஐந்து லட்ச ரூபாய்க்கு போட்டியாளர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், தொகையை பிக் பாஸ் அதிகரித்துக் கொண்டே செல்வார் என்பது கடந்த சீசன்களில் நாம் பார்த்த ஒன்று தான்.

அதுவும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த தொகை அதிரடியாக அதிகரிக்கும். இதை நன்கு உணர்ந்த கவின் பணம் தான் முக்கியம் என்றால், இன்னும் சில மணி நேரங்கள் காத்திருந்து, இன்னும் சில கூடுதல் லட்சங்களுடன் வெளியேறி இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக அவர் வெளியேறி விட்டார். இதனால் பிக் பாஸின் திட்டத்தின் படி வின்னர் சாண்டிதான்.

இதேவேளை, பிக் பாஸை உலகம் முழுக்க சேர்க்கும் வகையில் தான் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிக் பாஸ் சாணக்கியமாக காய் நகர்த்தி உலகம் முழுதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வைரலாக்கி விட்டார். அதற்கு தர்ஷனும், லொஸ்லியாவும் முக்கிய காரணம் என்றே கூறலாம். கடும் கஷ்டத்திற்கு மத்தியில் தான் பிக் பாஸில்நுளைந்தனர்.

தற்போது அதிரடியாக ஈழத்தமிழரில் வெளியேற்றப்பட்டுள்ளார் அதில் ஒருவர். லொஸ்லியாவும் இடையில் வெளியேறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் மில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like