இன்று உலக சிறுவர் தினம். அத்தனை சிறுவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நாள். ஆனால் எம்மீழ மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களின் ஓலம் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட எம் பிஞ்சுகளை எம்மிடம் ஒப்படைத்துவிடுங்கள் என பெற்றோர்களும் உறவுகளும் கோரிக்கை விடுத்து கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்கள் உருண்டு தாசாப்தம் கடந்தபோதும் பிள்ளைகள் மட்டும் வரவேயில்லை. சிறுவர்களாக இருக்கையில் இனவெறியாளர்களின் கைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒப்படைத்திருந்தனர்.
இன்னும் உறங்காமல் காத்துகொண்டிருக்கின்றனர் உறவுகள். ஒப்படைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகளின் உருவம் எங்கே? யார் தருவார் அதற்கான பதில்… சிறுவர் தினத்தில்கூட என் பிள்ளை என்னுடன் இல்லையே எனக்கலங்கியவாறு பெற்றோர்கள் காத்துகொண்டிருக்கின்றார்கள் பிள்ளைகளின் வரவிற்காய்….!
இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது 2009 மே 18 அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாலகன் பாலச்சந்திரன் இனவெறி பிடித்த கொலைகாரர்களால் கொல்லப்பட்டார்.
சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழி ஒன்றில்,இருத்தி வைக்கப்பட்ட அந்த பிஞ்சின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவனை கொன்றவனை கொல்லவேண்டும் என்கின்ற வெறி எமக்குள் பற்றி எரிகின்றது.
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பாலச்சந்திரன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. காட்டிக்கொடுத்த எட்டப்பன் கூட்டத்தால் இலங்கை ராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் ராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு, அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் உலக சிறுவர் தினமான இன்றையநாளில் பாலன் சந்திரன் என்பவர் தனது முகநூலில் பதிவிட்ட நெஞ்சை உருக்கும் பதிவு ஒன்று,
சரணடைய சொன்னார்கள் – சரணடைந்தேன்
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்- உட்கார்ந்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்- சாப்பிட்டேன்
அப்புறம் பார்த்தால் சுட்டுக் கொன்றார்கள்-இறந்துவிட்டேன்.
ஆனால் ஒரு கேள்வி என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
ஏனென்றால் என் அப்பா ஒரு பயங்கரவாதியாம். எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்.
அப்படியென்றால் ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள் ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
அதற்கான பதிலையும் நானே சொல்லிவிடுகின்றேன்
ஏனென்றால் அவர் சிங்களவர் ..நான் தமிழன்
இப்போது உங்களிற்கு புரிகிறதா ? நடந்தது போர்க்குற்றம் இல்லை இனப்படுகொலை என்று! பாலச்சந்திரன் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






