ஹபரனை – ஹிரிவடுன்ன வெவ்பிட்டிய பகுதியில் அண்மையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானைகள் நஞ்சு வைத்தே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த 7 பெண் யானைகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத்தில் யானைகளுக்கு நஞ்சு வைத்தே கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 7 யானைகளும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் இறந்துகிடந்தன.
இந்தநிலையில் யானைகளின் இறப்புக்கு நச்சு மருந்து, கைத்தொழிற்சாலை கழிவுகள் அல்லது பெக்ரீயா போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இறப்புக்களுக்கான உண்மைக்காரணம் வரும் வாரத்தில் தெரியவரும் என்று பேராதெனிய பல்கலைக்கழக விலங்கின விஞ்ஞான பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






