பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள வேளையில் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்வது அவசியம் என சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள் என கோத்தபாய ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
வியத்மக அமைப்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.






