கோட்டாபயவின் வாழ்வில் கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு மேன்முறையீட்டு தலைமை நீதிபதிகளான யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் கோட்டாபயவுக்கு எதிரான மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.