கிடைத்த வெற்றியை முழுமையாக கொண்டாடுவதற்குள் கோத்தாவிற்கு மீண்டும் பேரிடியான செய்தி! ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு?

கோத்தபாய மீது தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் கோத்தாவின் ஜனாதிபதி கனவு மீண்டும் ஆட்டங் காணும் நிலையை அடைந்துள்ளது.

தற்போது கோத்தபாய வழக்கில் வெற்றி பெற்றாலும் மீண்டும் வழக்காளிகள் அப்பீல் செய்து கோத்தபாயவின் தேர்தல் வேட்பாளர் விண்ணப்பதை அப்பீல் வழக்கு முடியும் வரை ஒரு தடை உத்தரவு கோரி நிற்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக தவல்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர,

காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று தள்ளுபடியான நிலையில் மீண்டும் அவர்கள் எதிர்வரும் திங்கள் அவ் வழக்கிற்காக அப்பீல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

அந்த அப்பீல் மனுவில் கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மனு தேர்தல் செயலகத்தில் தாக்கல் செய்திருந்தால், அந்த விண்ணப்பத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பத்தில் கோத்தாவிற்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கோத்தாவின் இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ் மற்றும் இலங்கை அடையாள அட்டைய ஆகியவற்றை மீண்டும் சவாலுக்கு உட்படுத்தலாம். இன்றில் இருந்து 4 வாரங்களுக்குள் மனுதாரர்கள் அப்பீல் செய்யலாம்.

அத்துடன் மனுதாரர்களின் முக்கிய நோக்கம் கோத்தபாய தேர்தலில் களமிறங்குவதை தடுப்பதே என்பதால் இப்படியொரு வாய்ப்பு சட்டத்தில் உள்ளது.

இப்படியொரு சிக்கல் வரும் என்பதாலேயே சமல் ராஜபக்ச சுயேட்சை வேட்பாளராக பணம் கட்டியுள்ளார் .

அப்போ கோத்தபாயவின் ஜனாதிபதி கனவு அம்போதானா ?