தமிழர் வாழும் பகுதியில் இப்படி ஒரு அவலம்! சிங்கள பிரதேச செயலகத்தில் சரஸ்வதிக்கு பெரும் வரவேற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உஹன தனிச்சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக உள்ளபோதும், அங்குள்ள பிரதேச செயலகத்தில் வெகுசிறப்பாக சரஸ்வதி பூஜை கொண்டாட்டப்பட்டுள்ளது.

குறித்த விழா நேற்றையதினம் இடம்பெற்றது.

அப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் பூரண ஒத்துழைப்புடனும் அவரின் பங்கு பற்றுதலுடனும் வெகுசிறப்பாக வாணிவிழா இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இவ்வருடமும் இரண்டாவது தடவையாக உஹன பிரதேச செயலகத்தில் வாணிபூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தனை ஆண்டுகளாக கல்முனை பிரதேச செயலகத்தில் வாணிவிழா கொண்டாடப்பட்டுவந்த நிலையில் இந்த வருடம் அங்கு வாணிவிழா கொண்டாடுவதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளர் தடைவிதித்துள்ளார்.

முஸ்லிம் பிரதேச செயலகங்களில் தமிழரின் கலாச்சார விழாக்களுக்கு தடை ஆனால் சிங்களவர் வாழும் உகன பிரதேச செயலகத்தில் வாணி விழா களை கட்டியது!!!

அம்பாரை மாவட்டத்தில் கல்முனைக்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ,நிந்தவூரில் தற்போது இடம்பெற்றுவரும் தமிழரின் வாணிவிழா கொண்டாட தடை விதித்துள்ளார்கள் அதிலுள்ள முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் ஆனால் தமிழ் மொழி பேசாத தனிச் சிங்களவர் வாழும் சிங்களபிரதேச செயலாளர் தலமையில் இதே மாவட்டமான அம்பாரையின் வாணிவிழா இடம்பெற்றுள்ளது.

இதே வேளை தமிழர் வாழும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்,ஆலையடிவேம்பு ,திருக்கோயில் ,காரைதீவு,நாவிதன்வெளி போன்ற பிரதேச செயலகங்களில் இஸ்லாமிய மதநிகழ்வான இப்தார் நிகழ்வு இடம்பெறுவது வழமை.

இவ்வருடமும் உஹன பிரதேச செயலகத்தில்பிரதேச செயலாளர் அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் பங்கு பற்றுதலுடன். சரஸ்வதி பூசை நேற்று (2019-10-04 ) மிகச்சிறப்பாக நடைபெற்றது.