யாருக்கு வாக்களிக்க வேண்டும்..? மக்களிற்கு மைத்திரியின் அறிவுறுத்தல்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன் போது சரியான பாதையில் தீர்மானம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த மாநாடு இடம்பெற்றது.

மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிவரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தமது பதவிக்காலத்தினை நிறைவு செய்து, பதவிக்காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒருவராக அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்வேன் என கூறியுள்ளார்.

அத்துடன் எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி எனவும் தெரிவித்த ஜனாதிபதி, நீங்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கு வாக்கினைசெலுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் செய்பவர்கள் தொடர்பில் ஆராய்து பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்காக யார் அரசியல் செய்கின்றனர் என்றும் , அதுபோல தன்னலனுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிற்காக அரசியல் செய்யும ஏராளமானவர்களை மக்கள் சேவகர்களாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கின்றதாக கூறிய ஜனாதிபதி மைத்திரி , கட்சியாயினும் நண்பராயினும் உறவினராயினும் ஊழல் மோசடிக்கு தான் இடமளிக்கமாட்டேன் எனவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.