மகிந்தவின் குடும்பத்தில் இருவர் ஜனாதிபதி தேர்தலிற்கு கட்டுப்பணம் செலுத்திய இரகசியம் கசிந்தது

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

இன்று முதல் தேர்தல் வெற்றிக்கான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியலில் முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தீர்மானிக்கவில்லை.

அரசாங்கத்தின் சூழ்ச்சியில் இருந்து எதிரணியை பாதுகாத்துக் கொள்ளவே அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் என்றும் அவர் கூறினார்.