மீண்டும் சிக்கலில் கோத்தபாய! தற்போது என்ன பிரச்சனை?

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்கு கருத்து தெரிவித்த குறித்த மனுவை தாக்கல் செய்தவர்களின் ஒருவரான சந்திரகுப்த தெனுவர, அவர்கள் கூறிய சான்றுகள் சரியானவை என நிரூபிக்கப்பட்டு, ராஜபக்ச போட்டியிட அனுமதிக்கப்பட்டால், அது நாட்டிற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டினார்.

அத்தோடு எழுதப்பட்ட சமர்ப்பிப்புகள் மற்றும் வாதம் எவ்வாறு சென்றது என்பதிலிருந்து, தாங்களுக்கு ஒரு வலுவான வழக்கு இருப்பது தெளிவாகத் தெரிவினரது என்றும் வழக்கு ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தற்போதுவரை குழப்பமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் என்ன காரணங்களை வழங்குகிறது என்பதை அறிந்த பின்னர், தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், என அவர் கூறினார், அத்தோடு வேறுபட்ட சட்ட முடிவுகளை அடைய இன்னும் காலம் உள்ளது என்றும் சந்திரகுப்த தேனுவர தெரிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதேவேளை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like