கனடாவில் பிரபஞ்ச தமிழ் அழகி பட்டத்தை தட்டிசென்ற ஈழமங்கை டக்சினி…!

கனடாவின் ரோறடோவில் கடந்த மாதம் 27 நடைபெற்ற பிரபஞ்ச தமிழ் அழகி 2019 ஆக ஈழமங்கை டக்சினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரப்பிள்ளை டக்சினி அவர்கள்பிறந்ததுவளர்ந்தது கல்வி பயின்றது எல்லாம் திருகோணமலை சென்ற் மேரிஸ் கல்லூரியில் ஆகும்.

அவர் கடமை புரிவது HSBC வங்கியில். மும்மொழிப்புலமை மிக்கவர் என்பதோடு பலவீனங்களை பலமாக மாற்றும் பலமிக்கவர் டக்சனி.

திருகோணமலை மூதூர் பழம்பெரும்பதி பள்ளிக்குடியிருப்பின் பிரபல குடும்மப்பிண்ணனியில் பிறந்த டக்சனியின் பெற்றோர்கள் தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை , மற்றும் தவமணிதேவி ஆகியோரின் கனிஷ்ட புத்திரிகளில்ஒருவர் டக்சினி.

பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி என்பவற்றிற்றின் பழையமாணவர், ஆசிரியர், அதிபர் ,பள்ளிக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயம்வெருகலம்பதி சித்திரவேலாயாத சுவாமி,கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர், செயற்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர் டக்சனியின் தந்தை தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள்.

அத்துடன் அவர் திருகோணமலை கோணேசர் ஆலயஅறங்காவலர்பொதுக் குழுவின் உறுப்பினர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், கவிஞர், கலை கலாச்சார செயற்பாட்டாளர் இன்னும் செயற்பட்டு வருபவர்.

மேலும் இலங்கை அரசால் கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இப்படி பன்முக ஆளுமை மிக்கவர் பிரபஞ்ச தமிழ் அழகியின் தந்தை.

டக்சினியின் தாயார் தவமணிதேவி அம்மையாரும் ஊரின் நிகழ்வுகளில்ஊக்கமுடன் இணைந்திருக்கும்செயற்பாட்டளரே இருந்துவருகின்றார்.

மேலும் டக்சினி சிதம்பரப்பிள்ளை பள்ளிக் குடியிருப்பை வேரடி மண்ணாக கொண்டு, திருமலையில் இருந்து பல கண்டங்கள், சமுத்திரங்கள் கடந்து தன்னோடொத்த சக தேவதைகளுடன் போட்டியிட்டு ஒப்பாருள் முதன்மை பெற்று, மகுடம் சூடியுள்ளமை ஈழதமிழருக்கெல்லாம் பெருமை.