ஜனாதிபதி தேர்தலில் நாமலும் குதிப்பு.? குழப்பத்தில் மகிந்த அணி

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 11 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அதன்போது அவர் 15,726 வாக்குகளைப் பெற்று அந்த முறை நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் அவருடைய பெயருடன் ராஜபக்ஷவின் பெயரும் இருப்பதனால், தேர்தலில் பலர் அவருக்கு வாக்களித்துவிட்டதாக அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் தாக்கம் செலுத்தியதால் மகிந்த அணி குழப்பத்தில் உள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 18,174 வாக்குகளைப் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்துக்கொண்டவர் ஆராச்சி ரத்னாயக்க சிறிசேன என்பவராவார்.

அவர், தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு டம்மியாக நிறுத்தப்படிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like