சூட்சுமமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் முற்றுகை -பலர் கைது

கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

அந்தவகையில் சீதுவ, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பியகம போன்ற பிரதேசங்களில் ஆயுர்வேத நிலையங்கள் எனும் பெரரில் விபச்சார விடுதிகள் மிக நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டான, களுத்துறை, சிலாபம், கேகாலை, உக்குவளை, கம்பளை, கொடகவெல, பொல்பித்திகம, ஹபரண, பிபில, ஹங்குரங்கெத்த, பல்லம, எல்லக்கல, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட யுவதிகளும் பெண்களுமே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் விடுதிகளின் முகாமையாளர்களும் அடங்குகின்றதாகவும் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like