செல்வத்தை துரத்தினார் சுமந்திரன்! யாழில் பூட்டிய வீட்டில் பிடிபட்டார் சிறிகாந்தா?

ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடுகிறார்.

இந்த கேள்விக்கு இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், “பலமான பின்னணிகள்“ இல்லாமலிருக்கவும் வாய்ப்பில்லை.

இதேவேளை, சில அரசியல்புரசல் தகவல்களை பட்டியல்படுத்தி, விடயத்தை காலத்தின் முடிவில் விட்டுவிட்டு விவகாரத்திற்கு செல்லலாம்.

வடமாகாணசபை தேர்தல் சமயத்தில் அனந்தி சசிதரன் வீட்டில் நடந்த கைக்குண்டு தாக்குதல், மஹிந்த ராஜபக்ச காலத்தில் நீதிபதியொருவரின் இடமாற்ற விவகாரத்தில் அரச அமைச்சராலேயே முடியாத விடயத்தை, சிறிகாந்தா தொலைபேசியில் பசிலுடன் பேசி முடித்தது யாவரும் அறிந்ததே.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று சிவாஜி சார்பில் அனந்தி சசிதரனால் செலுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் யாழில் ரெலோவின் ஏற்பாட்டில் போராட்டம் நடந்தது இது ரெலோவின் பம்மாத்து.

இதில் கலந்து கொண்ட சிவாஜியிடம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமுள்ளதா என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருக்கிறார்.

அப்படியெந்த திட்டமுமில்லையென சிவாஜிலிங்கம் மறுத்ததாக செல்வம் கூறினார் அதன் உண்மை தெரியாது காரணம் செல்வம் சொல்வதெல்லாம் உண்மை.

ஆனால், நேற்று கட்டுப்பணம் செலுத்தினார் சிவாஜிலிங்கம்

இதையடுத்து கட்சிக்குள் பெரிய கலவரம் ஏற்பட்டது. கட்சியின் முடிவை மீறி சிவாஜிலிங்கம் செயற்பட்டதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கட்சி செயற்பாட்டாளர்கள் கட்சி தலைமையுடன் பேசி, தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதையடுத்து, சிவாஜிலிங்கத்துடன் கட்சி பிரமுகர்கள் பேசினர். எனினும், சிவாஜிலிங்கம் மிரலாமல் முடிந்தால் கட்சியை விட்டு நீக்கிப்பாருங்கள் என சவால் விட்டார்.

சிவாஜியின் சர்ச்சை உருவானதும், கட்சி செயலாளர் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்ட கட்சி பிரமுகர்கள், உடனடியாக கட்சியின் அரசியல் உயர்பீடம், தலைமைக்குழுவை கூட்டும்படியும், சிவாஜிலிங்கம் மீதான ஒருக்காற்று நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வேண்டுமென்றனர்.

எனினும், இதற்கு சாதகமாக பதிலளிக்காத சிறிகாந்தா தனது தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார் ஏன் என்றால் சிவாஜிலிங்கத்தை இந்த வேலைக்கு வழி அனுப்பியது சிறிக்காந்தா.

சிறிகாந்தாவும், சிவாஜியும் நெருக்கமானவர்கள். சிறிகாந்தா தொலைபேசியை நிறுத்தி வைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் தவிர்ப்பது, சிவாஜிலிங்கத்தை காப்பாற்றவே என்ற கதை கட்சிக்குள்ளேயே உறுதிப்படுத்தப் பட்டது.

சிறிகாந்தாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கத்தின் நகர்வு இடம்பெற்றதாக கட்சி பிரமுகர்கள் சிலர் இப்போதும் நம்பகிறார்கள்.

இது குறித்து பேச முடியாதவறு சிறிகாந்தா தொலைபேசி தொடர்பை துண்டித்திருந்தார். நேற்றும், இன்றும் அவருடன கட்சி தலைவர்கள் பேச முயன்றும் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில் இன்று கட்சி தலைவர் செல்வம் மற்றும் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிரடி முடிவெடுத்து, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றனர்.

என்.சிறிகாந்தாவின் சின்ன வீட்டிற்கு நேரில் சென்று கதவை தட்டியுள்ளனர் அங்கு விழி பிதுங்கி நின்றார் சிறிகாந்தா.

கட்சியின் அரசியல் உயர்பீடத்தை உடனடியாக கூட்டி, சிவாஜிலிங்கத்தின் மீது கடும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் சிவாஜிலிங்கத்தை காப்பாற்றவே சிறிகாந்தா முயன்றார். சிவாஜி மீது நடவடிக்கை அவசியமில்லையென்றார். தவிசாளர் பதவியிலிருந்து மட்டும் விலக்கலாமென்றார்.

எனினும், தவிசாளர் பதவியை சிவாஜியே துறந்து விட்டதை சுட்டிக்காட்டி, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக்க வேண்டுமென்றனர்.

அத்துடன் வரும் சனிக்கிழமை அரசியல் உயர்பீடத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தினர். சனிக்கிழமை அந்த கூட்டத்தை கூட்டுவதென முடிவானது.

இதில் என்ன சுவாரசியம் என்றால் இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க தவறினால் செல்வத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பறித்து ஐ.தே.கவிற்கு வழங்குவேன் என சுமந்திரன் ஊடாக செல்வத்திற்கு கடுமையான செய்தி வழங்கப்பட்டுள்ளது இதனாலே தான் செல்வம் அடைக்காலதன் வேகமாக ஓடித் திரிவதாக சட்டத்தரணி சயந்தன் கூறியுள்ளார்.

வழமையாக எதைக் கேட்டாலும் சிரித்துக் கொண்டிருக்கும் செல்வம் இதில் மட்டும் வேகமாக ஓடுகிறார் என்றால் உங்களிற்கு சிந்திக்கத் தெரியாதா என நண்பர்களிடம் கூறி சிரித்துள்ளார் சயந்தன் நம்ம தல சுந்திரனின் கட்டுப்பாட்டில் தான் ரெலோ கட்சியும் அவர் கூறுவது தான் முடிவு காரணம் வரும் பாராளுமன்றத்தில் ஐந்து வருடம் செல்வம் சோறு திண்ணனும் என மேலும் கூறியுள்ளார்.