25 வயதான இளைஞன் செய்த அசிங்கமான வேலை- பெண்களே அவதானம்..!

25 வயதான இளைஞன் ஒருவன் தனது கையடக்க தொலைபேசியின் ஊடாக, பெண்களின் அந்தரங்கங்களை மிகவும் சூட்சுமமான முறையில், காணொளி எடுதமைக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞன், தன்னுடைய பாதணிக்குள் கையடக்க தொலைபேசியை மறைத்துவைத்தே, பெண்களின் அந்தரகங்களை படம்பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை, பலாங்கொடை நீதவான் ஜயசூவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது , எதிர்வரும் 10 ஆம் திகதி வரையிலும் இளைஞனை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பலாங்கொடை வாராந்த சந்தைக்கு வரும் பெண்கள், மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்யும் போதே, தன்னுடைய பாதணிக்குள் மறைத்துவைத்திருந்த கையடக்க தொலைபேசியின் ஊடாக குறித்த நபர் இவ்வாறு படம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்டவரிடமிருந்த கையடக்க தொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது, பெண்களின் அந்தரகங்கள், நிர்வாணப்படங்கள், மிகமோசமான காட்சிகள் பல பதிவுச் செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like