கொழும்பில் அதிரடி நடவடிக்கை! பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்‌ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தேர்தல் பிரச்சார பணிகளில் ஜனாதிபதி மைத்ரி ஒதுங்கியிருப்பாரெனவும் உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க மைத்திரி இணக்கம் தெரிவித்த போதும், தாமரை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதன்காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மைத்திரி பதவியில் இருந்து விலகியதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.