ஓமந்தை சமுர்த்தி உத்தியோகத்தரின் முக சுழிக்கவைக்கும் செயல்- பலரும் விசனம்

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வருடம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மாணவியின் குடும்பத்தினர் கடும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தரொருவரே ஓமந்தை மத்தியகல்லூரியில் இம் முறை பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரின் வறுமையை காரணம் காட்டி அவர்களின் வீட்டிற்கு சென்று வந்த சமுர்த்தி உத்தியோகத்தர், மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பரீட்சை முடிவடைந்ததும் அழைத்து சென்றுள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் மாணவியின் குடும்பத்தினர் தமது பிள்ளையின் எதிர்காலம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பிள்ளை உள்ள நிலையில் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like