கடும் கோபத்தில் கோத்தபாய!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கை போதுமானதாக இல்லையென பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கையில் சஜித் முன்னணி வகிப்பது தெளிவாகியுள்ளதாகவும், இதற்கு சமூக வலைத்தள பிரச்சார குழு முழுமையான பொறுப்பு கூற வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக் பக்கம் ஊடாக பணம் சம்பாதிக்கும் இளைஞர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யோசனைகள் சிலவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்துள்ளனர்.

எனினும் பொதுஜன பெரமுனவின் சமூக வலைத்தள பிரச்சார குழு அது குறித்து கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த இளைஞர்களின் பக்கங்கள் அனைத்தும் சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளப்பட்டுள்ளன.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனால் கோத்தபாய ராஜபக்சவின் விசேட பிரச்சார குழு, சமூக வலைத்தள பிரச்சார குழு மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like