படுதோல்வி அடைந்த ரணில்! வெற்றிக் கொண்டாட்டத்தில் மஹிந்த

எல்பிட்டி பிரதேச சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இதெவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்ற 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

காலி மாவட்டத்தில் எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் 75 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

எல்பிட்டி பிரேதேச சபைத் தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றனர். இந்த தேர்தல் மூலம் எல்பிட்டி பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர். அவர்களில் 17 பேர் தொகுதிவாரியாகவும், 11 பேர் விகிதாசர முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி. ஜே.வி.பி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை அங்கத்துவப்படுத்தி 155 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.