யாழ் இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு புதிய பதில் அதிபராக கல்லூரியின் பழைய மாணவரான ரட்ணம் செந்தில்மாறன், கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரட்ணம் செந்தில்மாறன் கல்வித் துறை, நிர்வாகத் துறை சட்டத்துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி மிக்கவராவர்.

இதேவேளை இதுவரை காலமும் பதில் கடமையாற்றி வந்த சதாசிவம் நிமலன், மாணவர் அனுமதிக்காக கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான ஆர். செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், பட்டப் பின் தகைமையையும் கொண்டவர்.

இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று, தகுதி பெற்றதுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like