பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாறவுள்ள யாழ் விமானநிலையம்! 17 ஆம் திகதி திறந்துவைப்பு

இலங்கையின் மிக முக்கியமான விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமானநிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் ஆக மாறுகின்றது.

இதனால் வடமாகணம் பாரிய நன்மைகளை அடையவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல தசாப்தமாக இராணுவ விமானநிலையமாக இருந்த பலாலி விமான நிலையத்தை திடீரென சர்வதேச விமானநிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டன.

இதேவேளை அம்பாந்தோட்டை வில் கட்டப்பட்ட மத்தள விமானநிலையம் போல் அல்லாது கேள்விஅதிகரிக்கும் போது விமான நிலையத்தை விஸ்தரிக்கும் இரண்டாம் கட்ட நோக்கம் சரியானது.

எதுவித நோக்கமும் இன்றி அம்பாந்தோட்டை மத்தள விமானநிலையம் தேவையற்று கட்டப்பட்டு தற்போது கிடப்பில் கிடக்கிறது.

இலங்கையில் தற்போதுள்ள நிலையின்படி கட்டுநாயக்காவிற்கு அடுத்தபடியாக

அதிகமானோர் வெளிநாட்டிலிருந்து வந்து செல்லும் இடமாக யாழ்ப்பாணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதை சரியாக தெரிவு செய்து ஏற்கனவே இருந்த விமான நிலையத்தை விஸ்தரித்ததற்காக இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கலாம்.

இதேவேளை விமான நிலையத்தின் 1ம் கட்ட பணிகள் நிறைவடைந்து தி றப்பு விழாவுக்கு விமான நிலையம் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றது.

எதிா்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பமாகவிருக்கின்றது.

இதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.

இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள்,

நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like