ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் உண்டு – ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது

தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவ்வேறானாது என மலேசியா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் கூறியுள்ளார்.

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது தனக்கும் அனுதாபம் உள்ளதாக கூறிய அவர் ஆனால் தீவிரவாத இயக்கத்தினர் மீது அனுதாபம் காட்ட முடியாது எனவும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என குறிப்பிட்டு நேற்று மேலும் ஐவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அகுறித்த ஐவரும் செயலிழந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கியது, ஆதரவு அளித்தது, நிதி திரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஐவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 பேர் எனவும் எனவும் குறிப்பிட்டஅவர் கைதுசெய்யப்பட்டவர்களில்ஒருவர் 52 வயது இடைநிலைப் பள்ளி ஆசிரியர் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியர் இசமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரும் உள்நாட்டுப் போரின்போது இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுக்கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பினாங்கு புக்கிட் பெர்தாஜாமில் கைது செய்யப்பட்ட 26 மற்றும் 29 வயதுமிக்க அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப்புலி இயக்கத்தின் கொடிகள், புத்தகம், போஸ்டர்ஸ் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் படங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மலேசியா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான்கூறியுள்ளார்.