லண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்ற இந்தியத் தமிழ் பிரஜை ஒருவரின் கடவூச் சீட்டை பார்த்த அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் லண்டன் செல்லும் நோக்குடன் அபுதாபி செனறுள்ளனர்.

அபுதாபியிலிருந்து வேறொரு விமானத்தில் லண்டன் செல்ல எண்ணியுள்ளார் சுவாமி சிவானந்தா.

இந்த நிலையில், கடவூச்சீட்டை அவதானித்த அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் சுவாமி சிவானந்தா, 1896ஆம் ஆண்டு பங்களாதேஷில் பிறந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறாயின், சுவாமி சிவானந்தாவின் வயது 124 என கணிப்பிடப்படுகின்றது.

இந்த ஆவணங்களை அவதானித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஏனைய ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவரின் வயது 124 என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த நபருடன் இணைந்து விமான நிலைய அதிகாரிகள் புகைப்படம் எடுத்துள்ளதுடன், அவை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.