இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெற்றது இந்திய அணி.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவித்தார். அகர்வால் 108 ஓட்டங்களையும், ஜடேயா 91 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 275 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பத்தாம் நிலை வீரர் மகாராஜ் 72 ஓட்டங்களைச் சேர்த்தார். பிளசி 64 ஓட்டங்களையும், பிளன்டர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸ்வின் 4, உமேஸ் யாதவ் 3, சமி 2, ஜடேயா 1 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

326 ஓட்டங்களால் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆரம்பித்த தென்னாபிரிக்கா 189 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸால் படுதோல்வியடைந்தது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like