கஜேந்திரகுமாரின் மிக முக்கியஸ்தர் கோத்தபாயவிடம் சரணடைந்தார்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் ப.ஜெயக்காந்தன் கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாா்.

இன்று காலை அவரது நகர வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிற்கு பரப்புரை மேற்கொள்வது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ்மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ஜீ.ஏ.சந்திரசிறியுடன் அவர் இணைந்து கலந்துகொண்டார்.

இதன்போது சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகரசபை உறுப்பினர் ப.ஜெயக்காந்தன் தலைமையில் கோத்தபாய ரஜபக்சவிற்கு பரப்புரைப் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை தமிழ்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்க முடிவெடுத்துள்ள நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சோி நகரசபை உறுப்பினா் ப.ஜெயக்காந்தன் கோத்தாவின் பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை ப.ஜெயக்காந்தன் கடந்த காலங்களில் கஜேந்திரகுமாரின் மிக நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்ததோடு கஜேந்திரகுமாரின் எல்லா செயல்பாடுகளிலும் முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் எனபதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

இவ்வாறான நிலையில் ப.ஜெயக்காந்தன் தற்பொழுது கோத்தபாயவின் பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.