புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக பலியான யாழ் க்ஷர்மிலன்!

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயது தமிழ் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, இத்தாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.