கண்டி, மடுல்கலை தோட்டத்தில் கிறின்லேட் பகுதியில் இன்று (12) முற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகி 25 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளை தேயிலைச்செடிக்கு அடியில் இருந்த குளவிகூடு (பொந்து தேன்) கலைந்தே தொழிலாளர்களை, குளவிகள் கொட்டியுள்ளன. இதனால், 25 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

உடனடியாக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து வெளியிடுகையில்,
இப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட குளவிகூடுகள் காணப்படுகின்றன. இக்கூடுகளை அகற்றுமாறு தோட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்றனர்.






