மூன்று வயது குழந்தைக்கு தாயால் நேர்ந்த சோகம்… நீதிமன்றம் விடுத்த மிக கடுமையான தண்டனை!

தனது மூன்று வயது குழந்தையை கொலை செய்தல் மற்றும் இறந்த குழந்தையின் உடலை மறைத்து வைத்தல் போன்ற இரண்டு வழக்குகளின் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணொருவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதிக்கு இடையில் ஹினிதும-தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாய் இதன்போது குழந்தையை அடித்து கொலை செய்ததோடு, குழந்தையின் உடலை அங்குள்ள தோட்டமொன்றில் புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வழக்கிற்கு தற்போது தென் மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யு.பி.எஸ்.நிஸ்ஸங்க தீர்பளித்துள்ளார்.

இதில் முதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகளும் இரண்டாவது குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.