இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் என்ற பெருமையினை இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் பெற்றுள்ளது.
இதேவேளை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் விமானிகள் இருவரும் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையை சேர்ந்த தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த விமானிகளிற்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.






