மறைக்கப்பட்ட உண்மையை தானே கூறி சிக்கித் தவிக்கும் கோத்தபாய! சஜித் எச்சரிக்கை

மக்களின் பிரச்சினையை இருபத்து நான்கு மணித்தியாலத்தில் தீர்த்து வைப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெக்கிராவையில் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்தில் எனது எதிராளி தனது சகோதரனிடம் கூறியிருந்தார். உரம் வழங்குவேன் என. அவருக்கு தனியாக பேசத்தெரியாது. அனைத்தையும் அண்ணாவிடம் கேட்டே பேசுவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தார். ஊடகவியலாளர்களிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்.

கடந்த, காலங்களில் யுத்தத்தை நின்று வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு கட்டை காற்சட்டை அணிவித்து அவரை கடந்த அரசாங்கம் சிறையில் அடைத்தது. ஆனால் அதற்கு இன்று காலம் பதில் சொல்லிவிட்டது. ஊடகவியலாளர் சந்திப்பின்போது யுத்தத்தை வழிநடத்தியது இராணுவத் தளபதியே என்று கோத்தபாய ஒத்துக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.