வவுனியாவில் மதுபோதையில் அம்பியூலன்ஸ் வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 25,000ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
வவுனியா வீதிப் போக்குவரத்து பொலிஸாரினால் வாகனச்சாரதியை அழைத்து அவரிடம் ஆவணங்களை பரிசீலனை மேற்கொண்ட போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நேற்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குற்றச்சாட்டினை மன்றில் ஏற்றுக்கொண்ட நபருக்கு ஒரு வருடம் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்ததுடன், அறு மாதம் கால சிறைத்தண்டனையும் 25,000 ரூபா தண்டமும் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






