ஸ்ரீலங்கா கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது ITJP (The International Truth and Justice Project) என்ற சர்வதேச அமைப்பு.
ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி தலைமையில், தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட ‘The Black Ops Unit’ என்ற விசேட புலனாய்வுப் பிரிவு அந்த இரகசிய முகாமின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் ITJP அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தச்குற்றச்சாட்டுக்களுக்கான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ITJP அமைப்பின் ஊடக அறிக்கை:
மோசமான குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கையின் உயர் கடற்படை அதிகாரிகள்.
23 ஒக்டோபர்2019
ஜெகானஸ்பேர்க்:2008 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை முகாம்களினுள்ளே இடம்பெற்ற சித்திரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் இலங்கை உடனான கடற்படை கூட்டுறவினை மீள்பார்வை செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளது.
ITJPஇனால் வெளியிடப்பபட்டுள்ள “முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை” என்ற அறிக்கை திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் 11 பேர் காணாமற் போனமை பற்றி இலங்கைக்கு உள்ளே பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை,தப்பி பிழைத்தவர்களிடமும் மற்றும் உள்சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்களுடன் ஒப்பீடு செய்துள்ளது.
அந்த அறிக்கையானது பாரதூரமான விசாரணை தவறுகள் , கருத்துவேற்றுமை அரசியல் தலையீடுகள் போன்றவற்றை இந்த இலங்கை வழக்கில் அடைளாயங்கண்டுள்ளது. 2009 இல் சிவில் போர் முடிவடைந்ததுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் நிறுத்தப்படவில்லை அத்துடன் சித்திரவதை ஒரு கடற்படைத்தளத்தில் மட்டும் இடம்பெறவில்லை.
“திருகோணமலை 11பேர் கடத்தப்பட்ட வழக்கானது இலங்கையின் நீதித்துறையில் ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. ஆனால் அது துர்அதிஸ்டவசமாக தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது.திருகோணமலையில் கடற்படை புலனாய்வின் கட்டளைப்பீடத்திற்குப் பொறுப்பாக இருந்த அல்லது அங்கிருந்த பல மூத்த கடற்படை அதிகாரிகள் கூட விசாரணை செய்யப்படவில்லை ,குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும் பதவி உயர்வும் வழங்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்டு உயிர்வாழ்பவர்கள் ஒரு போதும் கூடவிசாரணை செய்யப்படவில்லை” என ITJPஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
கடற்படைப் புலனாய்வுக்குள்ளே முன்னாள் கடற்படைத்தளபதியால் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு கறுப்பு நடவடிக்கைப் பிரிவு என்ற விசேட புலனாய்வுப்பிரிவின் நடவடிக்கைகள் பற்றி மூத்த அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
மற்றைய விடயங்களுக்கு மத்தியில், விசேட விசாரணைப்பிரிவின் உறுப்பினர்கள் நாட்டின் மிகவும்பாதுகாப்பான கடற்படைத்தளத்தில் ஒரு நிலக்கீழ் சித்திரவதை முகாமினை இயக்கியிருப்பதாகவும் அங்கு பல சிறைக்கைதிகளை பல ஆண்டுகளாக நிலக்கீழ் அறைகளில் தடுத்துவைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.
கடற்படைக் கட்டளை அமைப்பின் உடந்தை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அந்த இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டுவரப்படுவதும், பலர் விசாரிக்கப்படுவதும், உணவு வழங்கப்படுவதும் காவல்காக்கப்படுவதும் சாத்தியமற்றது என இந்த அறிக்கை வாதிடுகின்றது.
“அங்கு நடந்துகொண்டிருந்தவற்கு முற்றிலும் தாங்கள் பாராமுகமாக இருக்க வேண்டும் என எலோருக்கும்தெரிந்திருந்தது என நாங்கள் பேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். கடற்படையின் முழுக்கட்டளை அமைப்புமே இந்த வன்முறைகளில் உடந்தையாக இருந்தது போல் தெரிவதுடன் மோசமாக களங்கப்பட்டும் உள்ளது” எனவும் சூக்கா தெரிவிக்கின்றார்.
“ இந்த அமைப்பானது பொலிஸ் விசாரணைக்கு முற்றுமுழுதாக ஒத்துழைப்பு வழங்கி இந்த வழக்கில் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு வெகுமானமளிப்பதை நிறுத்தும் வரைக்கும் இலங்கை கடற்படையினருக்கு தடைவிதிக்கப்பட வேண்டிய நேரம் இதுவாகும்.
சர்வதேச பங்குதாரர்களுக்கு இப்போது அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இனிமேலும் இலங்கை கடற்படையினரின் குற்றங்களுக்கு பாராமுகமாக இருக்கமுடியாது”.
“முற்றிலும் பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை” என்ற அறிக்கையானது அதிர்ச்சியான தகவல்களை விபரிக்கின்றது. நீதிக்காக இன்னமும் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக இல்லாவிட்டால் அது கூறும் தகவல்கள் கிளர்ச்சியூட்டும் ஒன்றாக உள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தில் பொலிசார் சர்வதேச பிடியாணைவிடுத்த வேளையில் இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய சந்தேக நபர் ஒருவரை கடற்படைத் தலைமையகத்தில் மறைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் ஒருசாட்சியாளரை கடத்திச் செல்வதற்கும் முயற்சிசெய்தார்.
சிறையில், கடற்படைஅதிகாரிகள் பிரதான பொலிஸ் விசாரணை அதிகாரியிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துவருகின்றனர். சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளஅதே வேளையில் பல குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பினும் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
யூலை 2015 இல் திருகோணமலை நிலக்கீழ் முகாம்பற்றிய புவி நிலையியல் ஆள்கூற்றினை வெளியிட்ட முதலாவதுஅமைப்பு ITJPஆகும். அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐநா வின் ஒரு குழு அந்த இடங்களுக்கு நேரில் சென்றதுடன் நிலக்கீழ் சிறைகள் இருந்ததையும்உறுதிப்படுத்தியது.
இந்தஅறிக்கையினை http://www.itjpsl.com/reports/the-navy-a-collective-blind-eye இல் தரவிறக்கம் செய்யலாம்.






