கொழும்பில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் – கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளும் பாதிப்பு!

இன்று காலை நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள அதிக மழையுடனான காலநிலை காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் தற்போது வரை கொழும்பின் பல பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தும்முல்ல, பேஸ்லைன் வீதி , கிராண்ட்பாஸ், ஹார்டன் பிளேஸ் மற்றும் ஆர்மர் வீதி ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்பாடுகள் சீரற்ற காலநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8.50 மணிக்கு தரையிறங்கவிருந்த புது டெல்லியில் இருந்து வந்த UL 192 என்ற விமானம் மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.