என் தங்கையை அடித்து துன்புறுத்தி கொன்று விட்டனர்! பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் பெண்

ராஜாக்கமங்கலம் பழவிளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இந்துராணி என்ற பெண் தூக்கில் தொங்கி உயரிழந்துள்ளார்.

32 வயதுடைய ஒரு பிள்ளைக்கு தாயான இந்துராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவனான ஜோன் ஜீனத் தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால் இவர் மனமுடைந்து தூக்கில் தொங்கி நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனினும் “என் தங்கை இந்துராணியை அவருடைய கணவர் ஜோன் ஜீனத் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தார்.

என் தங்கை இறந்தால் தான் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்றும் கூறினார்.

இதை வைத்து பார்க்கும்போது இந்துராணி சாவில் மர்மம் இருக்கிறது.” எனவே உண்மை சம்பவத்தை கண்டறியும் படி இந்துராணியின் சகோதரர் ரவிசந்திரன் ராஜாக்கமங்கலம் பொலிஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். ஆனால் என் மனுவை பொலிஸார் கிழித்து போட்டுவிட்டனர்.

அவர்களாகவே எழுதி வைத்திருந்த புகார் மனுவில் என்னை மிரட்டி கையெழுத்து போட வைத்தனர். எனவே என் தங்கை சாவில் உண்மையை கண்டறிய வேண்டும்.

மேலும் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.