அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர் 

அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு உடனடி தீர்வினை கோரி அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும்  வடக்கில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இந்நிலையில் இன்று யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒன்றுகூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் தேங்காய் உடைத்து விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டனர்

தமது உறவுகளின் கோரிக்கையினை அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுத்து அவர்களின் உண்ணாவிரத்த்தினை நிறைவிற்கு கொண்டு வருவதுடன் அவர்களின் வழக்குகளை மனிதாபிமான முறையில் அணுகுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்-

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like