தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குத் தற்காலிக சான்றுப் பத்திரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக் காலங்களில் குறித்த தற்காலிக சான்றுப் பத்திரங்கள் செல்லுபடியாகும் என பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்காக ஒரு மில்லியனுக்கும் அதிக தொகை அட்டைகள் கோரப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை இதுவரை கிடைக்கவில்லை எனவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உயரதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இவை கிடைக்கப்பெறலாம் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.






