ரணிலின் வலது கரம் கோத்தபாயவிடம் சரனாகதி? பேரதிர்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக கடந்த நாட்களில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அத்தகைய அரசியல் மாற்றம் இன்னும் நடக்கவில்லை. விஜயதாச ராஜபக்ஷ சமீபத்தில் பொதுஜன பெரமுனவில் சேரப்போவதாக அறிவித்த போதிலும், அவர் உண்மையில் ராஜபக்சர்களுடனே இருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவர் அமைச்சராக பதவியேற்றார்.

அந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்பு மீண்டும் UNP அரசாங்கம் பதவியேற்ற பின்பு விஜயதாச ராஜபக்ஷ தனது ஒரு காலை வைத்திருந்தது ராஜபக்ஷ்ர்களின் தோணியில் ஆகும்.

UNPயில் இருந்து தாவுவதற்கு தயாராக இருக்கும் சக்திவாய்ந்த நபராக இந்த நாட்களில் அரசியலில் பேசப்படுபவர் சாகல ரத்நாயக்க என தெரிவிக்கப்படுகிறது.

அவர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பராக இருப்பதுடன், இப்போது சஜித்தின் கட்சி முன்வந்துள்ளதால், சாகல ரத்நாயக்க மிகவும் அமைதியான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார்.

சாகல ரத்நாயக்க UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மட்டும் அல்லாமல் ராஜபக்சர்களின் நெருங்கிய நண்பருமாவார்.

கடந்த காலங்களில் ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாமை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை உறுதி செய்ய இயலாமை ஆகியவற்றின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களில் சாகல ரத்நாயக்கவும் ஒருவர்.

இதற்கமைய சாகல ரத்நாயக்க கோட்டாபய ராஜபக்ஷவின் மேடைகளுக்கு வர தீர்மானித்திருந்தால் அது புதிய விடயமல்ல. காரணம் அவர் திரைக்கு பின்னால் இருந்து ராஜபக்ஷர்களின் தேவைக்கு இணங்க செயற்படும் நபர் என்பதால் ஆகும்.